Tuesday, 19 April 2016

முதலமைச்சர் ஜெயலலிதா சொல்லாமல் செய்தது






நமது தாய் நமக்கு சொல்லி செய்தது ஒன்றும் இல்லை என்று அனைவருக்கும் தெரியும் .

சொல்லாமல் செய்தது

1.பரமக்குடி துப்பாக்கி சூடு

2.இல்மனட் தாது மணல் வைகுண்டராஜன் தலைமையில் கொள்ளை

3.வட மாவட்டங்களில் சேகர் ரெட்டி தலைமையில் ஆற்று மணல் கொள்ளை

4.எதிர் கட்சிகளுக்கு சட்டசபையில் பேச வாய்ப்பளிக்காத சர்வாதிகார போக்கு (விதி 110)

5.விதி 110 ன் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்தும் அறிவிப்புகளாகவே உள்ளன .

6. தர்மபுரி தீ வைப்பு சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை .(உண்மையான )

7.தென் தமிழகத்தில் சாதிக் கொலைகளை அடக்க முடியாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை

8.சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பொது உங்கள் தொண்டர்கள் பொது மக்களுக்கு ஏற்படுத்திய சொல்லொன்னா துயரங்கள் .

9.சிறையில் இருந்த பொது அரசாங்கம் செல்படாத நிலையில் இருந்து .

10.பைல்களை தூக்க வேண்டிய அமைச்சர்கள் காவடி தூக்கி நேர்த்திக்கடன் செலுத்திக் கொண்டிருந்தார்கள் .

11.சாதி ஆணவக் கொலைகள் அதிகரிப்பு .இதுவரை 83 கொலைகள். ஓ .பி .எஸ் ஒன்றுமே நடக்க வில்லை என்று சட்டசபையில் அறிவித்தார்

12.சோலார் மின் திட்டத்தில் ராமநாதபுரம் , கடலாடி பகுதிகளில் விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு .இத்திட்டத்தில் அதானி குழுமத்துடன் சேர்ந்து ஒப்பந்த முறைகேடு .

13. உடுமலைபேட்டை சங்கரின் கொலையில் கொலையாளிகள் 2-3 நாட்களாகியும் கைது செய்யப்படாத நிலை .கொலையாளிகள் நீதிமன்றத்தில் சரணடைந்தார்கள் தவிர காவல் துறை பிடிக்கவும் இல்லை .

14.டி .எஸ்.பி விஷ்ணுபிரிய கொலை வழக்கில் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் யுவராஜ் whatsup இல் வீடியோ அனுப்பி தமிழகத்தையே அசர வைதுக்கொண்டிரந்த போதும் காவல் துறை அவர் எங்கு இருக்கிறார் என்று கண்டறியமுடியவில்லை .( தமிழக காவல் துறை ஸ்காட்லாந்து போலீஸ் அடுத்த இடம் என்று தம்பட்டம் வேறு )

15.முத்துக்குமாரசுவாமி போன்று நேர்மையான அரசு அதிகாரிகளின் தற்கொலைக்கு தூண்டிய அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி விடுதலை .அரசுப் பணியாளர்களுக்கு பதுகப்பிலாத நிலை

16.மதுரை கிரானைட் முறைகேடு வழக்கில் பி.ஆர் .பி விடுதலை .சகாயம் போன்ற அதிகாரிகளை பணி செய்ய விடாமல் இடைஞ்சல் செய்ததை நாடே அறியும்.ஆதாரங்களை காப்பாற்ற சுடுகாட்டில் படுக்க வேண்டிய நிலை

17.தலைநகரும் , தூத்துக்குடியும் இன்ன பிற பகுதிகளும் வெள்ளத்தில் அழிக்கப்பட்டப் போது கொட நாட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தீர்கள் .உங்கள் பாதங்களைக் கூட உங்கள் தொகுதியான ஆர் .கே நகரில் பதிக்கவில்லை

18.பால் , மின் ,பஸ் கட்டணங்களை உயர்த்தி நான் உங்களை விட்டால் எங்கே போவேன் என்று எங்கள் தலையில் நெருப்பை அள்ளிவைத்து அதில் நீங்கள் குளிர் காய்ந்தீர்கள் .

19.அம்மா உணவகம் ஆரம்பித்து பசி போக்கிய நீங்கள் அம்மா குடிநீரையும் ஆரம்பித்து தாகத்தை மட்டும் தீர்க்காது டாஸ்மாக் சரக்குக்கும் மிக்ஸ் பண்ணி அடிக்க எளிய வழி ஏற்படுத்தி விற்பனை இலக்கை இமயத்தை விட பெரிதாக்கி சாதித்தீர்கள் .

20.தங்களுடைய தவறுகளை சுட்டிக்காட்டிய விரல்களையும் கைகளையும் காவல் துறை கொண்டு உடைத்து நொறுக்கிநீர்கள் .ஜனநாயகத்தை காப்பற்றிநீர்கள் ( கோவன் மீது தேசத்துரோக வழக்கு . கல்லூரி மாணவர்கள் மீது தடியடி, சசி பெருமாள் உயிரழப்பை துச்சமாக எண்ணியது ) இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் . தங்களின் திறமையான நிர்வாகத்தை .ஆனால் இதை எல்லாம் சொன்னால் மக்கள் என்னை பைத்தியம் , வெட்டி நியாயம் என்று சொல்வார்கள் . மக்களே தீர்மானிக்கட்டும் , மக்களுக்காக நீங்களா என்று ......?